தமிழ் சினிமாவில் ‘தடையறைத் தாக்க’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் குறும்புக்கார பெண்ணாக நடித்து பிரபலமானார். அவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தனது கதாபாத்திரம் குறித்து கூறியுள்ளார். “இந்தியன் 2 படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருப்பதால் நான் நடிக்கவில்லை; எனது கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. எனது நிஜ வாழ்க்கையோடு பொருந்திய கதாபாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்தியன் 2 படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் தைரியமான பெண். இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவர் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக விவரித்தது என்னை நடிக்க தூண்டியது,” என்று தெரிவித்துள்ளார்.