Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இதென்ன வித்தியாசமான உடையா இருக்கே… கிளாமர் உடையில் கவர்ச்சி ஸ்டில்ஸ் வெளியிட்ட ஹன்சிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா மோத்வானி, தமிழில் பேச தெரியாமலிருந்தாலும், தமிழ் சினிமாவில் பெயர் பெற்றார். வடக்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து, பல வருடங்கள் மார்க்கெட்டை கைப்பற்றிய நடிகைகள், குஷ்பு, சிம்ரன், ஜோதிகா ஆகியோரின் வரிசையில் ஹன்சிகாவும் ஒருவர். சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு, தமிழில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” படத்தில் ஹன்சிகா நடித்தது அவரது தமிழ் சினிமா பயணத்தின் தொடக்கம். அதற்குப் பிறகு, விஜயுடன் “வேலாயுதம்”, “புலி” போன்ற படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், உதயநிதி, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். “வாலு” படத்தின் போது, ஹன்சிகா மற்றும் சிம்பு இடையே காதல் மலர்ந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அது முடிந்தது. இதையடுத்து, “மகா” படத்தில் சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார்.

தற்போது, ஹன்சிகா “காந்தாரி” என்ற படத்தில் நடித்துள்ளார், அது விரைவில் வெளியாக உள்ளது. பிஸியாக சினிமாவில் நடித்து வருவதுடன், தனது படுகவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில், ஒரு மார்டன் ஃபோட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News