Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இது அமரனின் ஆக்ஷன்… அமரன் படத்தின் ட்ரெண்ட்டிங் மேக்கிங் வீடியோ…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “அமரன்”. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் ஆர்.கலைவண்ணன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். “முகுந்தன்” என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

“அமரன்” திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படக்குழுவினர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அதில் படப்பிடிப்பு பணிகள், சிவகார்த்திகேயனின் ஆக்சன் பயிற்சிகள், சண்டைக் காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என முன்னோட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News