Tuesday, November 19, 2024

இதுதான் விஜய்யின் ‘தி கோட் ‘… வெங்கட் பிரபு சொன்ன குட்டி ஸ்டோரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘கோட்’. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இசை அமைப்பில் யுவன் மற்றும் ஒளிப்பதிவில் சித்தார்த் இணைந்து பணியாற்றியுள்ளனர், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியிடப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், படத்தின் கதை பற்றி வெங்கட் பிரபு வெளிப்படையாக பிரபல பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்துள்ளார் அதில்கூறியதாவது: இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பான ‘ரா’ வின் துணை அமைப்பு ‘சாட்ஸ்’, அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை, ரா அமைப்போடு இணைந்து பணியாற்றும்.  

இந்த அமைப்பில் பணியாற்றிய ஒரு குழு ஒரு காலத்தில் செய்த ஒரு விஷயம் தற்போது அவர்களுக்கு பிரச்னையாக வந்து நிற்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. இப்படம் பரபரப்பான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படம் ஒரு பெஸ்டிவல் மூடில் இருக்கும், வழக்கமான விஜய்யை வேறு விதமாக ரசித்து பார்க்கும் ஒரு திரைப்படமாக இருக்கும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News