Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

இணையத்தை அலற விடும் விஜய்யின் ‘தி கோட்’ ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, சுருக்கமாக ‘தி கோட்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு துணையாக பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர இருக்கின்றது, இதற்காக நேற்று (ஆக.,17) டிரைலர் வெளியானது.

இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இதில் விஜய் தந்தை மற்றும் மகன் ஆகிய இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். விஜய் இதற்கு முன்பு பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையான விஜய்யாக காட்டியுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கிய அஜித்தின் 50வது படமான ‛மங்காத்தா’வில் அஜித் பேசிய “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது…” என்ற டையலாக்கை, இந்த படத்தில் விஜயும் பேசியுள்ளார். மேலும், விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் இடம் பெற்ற “மருதமலை மாமனியே முருகைய்யா..” என்ற பாடல் காட்சியை வெங்கட் பிரபு இந்த படத்திலும் ரெபரன்ஸாக பயன்படுத்தியுள்ளார், இதனால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News