தனுஷ் இயக்கம், நடிப்பில் தயாராகி வரும் படம் ‘இட்லி கடை’. இப்படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இப்படத்திற்காக வெளிநாட்டில் இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். அதற்காக நித்யா மேனனிடம் படப்பிடிப்பிற்கான தேதிகள் கேட்டபோது தற்போதைக்கு இல்லை என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்காக மார்ச் மாதம் வரை தன்னுடைய தேதிகளை ஏற்கெனவே கொடுத்துவிட்டதால் ‘இட்லி கடை’ படத்திற்கு மேலும் தேதிகளைத் தர வாய்ப்பில்லை என்று நித்யா மேனன் சொன்னதாகவும் நித்யா மேனனிடம் வாங்கிய தேதிகளை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்ட நிலையில் நித்யா மேனன் தேதிகள் தற்போது இல்லாததால் படப்பிடிப்பை நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்யா மேனனிடம் பேசி எப்படியாவது மீதி படப்பிடிப்பை முடிக்க படக்குழு தீவிரம்காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.