சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது பெரியத்திரையில் இளம் நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.



குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமானார். சின்னத்திரையில் மாஸ்ஸாக இருந்த இவர், 2021ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.




தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடிக்கிறார்.திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தர்ஷா, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். சமீபத்தில் மார்டன் உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.