Touring Talkies
100% Cinema

Sunday, October 5, 2025

Touring Talkies

இங்க 80 நாட்கள்ல எடுக்குற படத்த அங்க 30 நாட்கள்ல எடுத்துடுவாங்க… மம்தா மோகன்தாஸ் ஓபன் டாக்! #MAHARAJA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

விரைவில் வெளிவர இருக்கும் விஜய் சேதுபதியின் படம் ‘மஹாராஜா’. இது அவரின் 50வது படமாகும். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு பிறகு, இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் மம்தா மோகன்தாஸ். கடைசியாக 2021ம் ஆண்டு ‘எனிமி’ படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது: “நான் மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் தமிழில் அதிக படங்கள் நடிக்க முடியவில்லை. இடையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்துக்காக அழைத்தார்கள். ஆனால், அந்தப் படப்பிடிப்பின் தேதிகள் தள்ளிப் போனபோது என்னால் தேதிகளை ஒதுக்க முடியாமல் நடிக்க இயலவில்லை.

‘மஹாராஜா’ படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் படங்கள் பலவற்றைப் பார்த்து அவரது நடிப்பை ரசித்திருக்கிறேன். அவருடன் நடிக்கப் போகிறோம் என்ற போது மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் ஆஷிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை சுற்றி நிறைய சஸ்பென்ஸ் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும்.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது என்னுடைய கேரக்டர் பற்றி மட்டும் தான் சொன்னார். ஆனால் நான் இப்போது முழுப் படத்தையும் பார்த்தபோது அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. படத்தின் சஸ்பென்ஸ் கடைசி வரை குறையாமல் இருக்கிறது, எல்லோரும் இந்த படத்தை ரசிக்க முடியும்.

தற்போது மலையாள சினிமா தேசிய அளவில் உயர்ந்துள்ளது. கேன்ஸ் பட விழாவில்கூட மலையாள கலைஞர்கள் விருது பெற்றுள்ளனர். இந்த உயர்வுக்கு காரணம் மலையாள சினிமா, ஸ்கிரிப்டை நம்புகிறது. திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்து விடுகின்றனர். தமிழில் 80 நாளில் எடுக்கும் படத்தை அங்கு 30 நாளில் முடித்து விடுவர். முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வந்தால் அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நான் தமிழ் படத்தில் நடித்தபோது சில நாட்கள் இரண்டு ஷாட் மட்டும் எடுத்து விட்டு அனுப்பி விடுவார்கள்.

தற்போதைய மலையாள படங்களில் தமிழின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ் கேரக்டர்கள் அதிகம் வைக்கப்படுகின்றனர். இதனால் இரு மொழிக்குமான உறவு மேம்படுகிறது. இது நல்ல மாற்றம். எனக்கு 18 வருட சினிமா அனுபவம் உள்ளது. 56 படங்களில் நடித்துவிட்டேன். படம் இயக்கும் எண்ணம் இல்லை. அது கடினமான பணி. நடிப்பில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது,” என்றார்.

- Advertisement -

Read more

Local News