நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் முக்கியமான நடிகர். இவர் கடைசியாக நடித்த லால் சலாம் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தற்போது, அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த திரைப்படம் பல மாதங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.

இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் ஒரு போலீஸ் அதிகாரியாக தோன்றுகிறார். அதேசமயம், செல்வராகவன் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.