விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் அப்பாவியாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிரடியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு விதமான பாத்திரங்களிலும் திறம்பட நடித்து வரும் அவர், தனக்கென தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ரசிகர்களை மகிழ்விக்க, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
விமான பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கிய ரேஷ்மா, சினிமாவில் இருந்த ஆர்வத்தினால் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தார். தொடர்ந்து இனிமையான நாட்கள், வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்கா கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ரேஷ்மா, படப்பிடிப்பில் உள்ள ஒவ்வொரு நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டு, புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போதைய புகைப்படம் ஆரஞ்சு நிற புடவையில் ஓட்டுமேல் அமர்ந்து, அழகாக போஸ் கொடுத்துள்ளது.