Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி… வாழை படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் -ஐ வாழ்த்திய தமிழக முதல்வர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பொன்வேல், ராகுல், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘வாழை’ படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டும், ரசிகர்களின் பாராட்டும் கிடைத்தது. பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தற்போது அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜிற்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம் !தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜிற்கு மீண்டும் வாழ்த்துகள்! ன சமூக வலைத்தளத்தில் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News