சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்கள் வாங்கி, அவற்றின் மூலம் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், சிலர் எளிமையான வாழ்க்கையைப் பேணுவதற்காக, சாதாரணமான பயணங்களையும் மேற்கொள்வதைப் பார்க்கலாம். நடிகை சமந்தா, சமீபத்தில் மும்பையில் ஆட்டோவில் பயணம் செய்தது தொடர்பாக, அதை ‘வைபிங்’ எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158405-819x1024.jpg)
இப்போது, ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன், மும்பையில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார் சமந்தா. தமிழில் தற்போது எந்தப் புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. சமந்தா நடித்து 2023ல் வெளிவந்த ‘குஷி’ தெலுங்குப் படத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு ஒரு படமும் வெளியாகவில்லை. ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடர் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியானது.
தெலுங்கில் மட்டுமே சில புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால், அவருடைய முழு கவனமும் தற்போதைய நிலையில் ஹிந்தி சினிமா மீதுதான் உள்ளது. ஹிந்தி வெப் சீரிஸ்களில் நடித்த பின்பு, பெரிய அளவில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.