ஸ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S. மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன் கேசவன் இணைந்து தயாரிக்க, மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.அறிமுக இயக்குநர் மகேஸ்வரன் கேசவன், காதல் மற்றும் உணர்வுகள் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கியுள்ளார்.

நகரங்களில் வசிக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை மையமாக கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது. சென்னையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், அதன் ஓட்டுநருக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக ‘Four சிக்னல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. படக்குழு, இந்தப் படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.