Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கிய ஆள்மாறாட்ட டாஸ்க்… தீபாவளியை சுவாரஸ்யமாக நகர்த்துவார்களா போட்டியாளர்கள்? #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் 8 தமிழ் கடந்த 6ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. பரபரப்பாக முன்னேறி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 23 நாட்களை கடந்து விட்டது. ஒவ்வொரு சீசனிலும் தவறாமல் இடம்பெறும் ஆள்மாறாட்ட டாஸ்க் இம்முறையும் அரங்கேறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்களில் ஒருவராக நடித்து, வேற லெவலில் பெர்பார்மென்ஸ் வழங்கினர். (இந்த செய்திக்கிடையே இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களை காணலாம்.)

பிரமிப்பூட்டும் விதமாக பிக்பாஸ் தொடங்கிய இந்த ஆள்மாறாட்ட டாஸ்க் மிகச்சிறப்பாக அமையப்பட்டுள்ளது. டாஸ்க் நடந்தபோது போட்டியாளர்கள் ஒருவரை மிஞ்சுவதற்காக போட்டியிட்டுக்கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர். திடீரென டாஸ்க் நிறுத்திய பிக்பாஸ், நாளை காலை வேக்அப் பாடலுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் என கூறி முடித்தார்.

இந்த டாஸ்கின் போது சில போட்டியாளர்கள் தங்களை மற்றவர்கள் நகலெடுத்ததை சிரித்துப் பாராட்டியிருந்தாலும், உள்ளுக்குள் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறலாம். அதற்காகவே டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தங்கள் உண்மையான கேரக்டருக்குத் திரும்பிய ஒவ்வொருவரும் தங்களது அபிமானவர்களுடன் சேர்ந்து உரையாடி மனநிம்மதியை பெற முயன்றுள்ளனர். ஆகவே இன்றைய நாள், தீபாவளிக்குத் துவங்கிய நெருப்பை ஒவ்வொரு போட்டியாளரின் மனதிலும் பரவச் செய்துள்ளது என்று எதிர்பார்க்கலாம்..

- Advertisement -

Read more

Local News