நடிகர் நானியின் 31வது படமாக உருவாகியிருக்கும் படம் “சூர்யாஸ் சாட்டர்டே”. “ஹாய் நானா” படத்தை தொடர்ந்து நானியின் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. இன்னும் சில தினங்களில், ஆகஸ்ட் 29ம் தேதி, இந்தப் படம் இந்திய அளவில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியீடாக இருக்கும் நிலையில், படத்தின் புரமோஷன்களில் நானி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் எஸ்.ஜே. சூர்யா அதிரடி வில்லனாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்ட விஷயங்களில் அவரது மிரட்டலான வில்லத்தனம் வெளியானது.


இந்தப் படத்தை பற்றி பேசிய எஸ்.ஜே. சூர்யா, இந்தப் படத்தை பணத்திற்காக மட்டும் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், “ராயன்” படத்தைப் போலவே “சூர்யாஸ் சாட்டர்டே” படமும் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன் என்றும் கூறினார். படத்தின் கதை வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஆக்ஷன் படங்களின் முன்னோடியாக ரஜினிகாந்தின் “பாட்ஷா” படத்தை சுட்டிக்காட்டினார். இதனிடையே, நானி, பிரியங்கா மோகன் ஆகியோருடன் தமிழ் ரசிகர்களுக்காக பேசிய எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு காமெடியை வைத்து அவரை கலாய்த்துள்ளார்.