நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் ஆக்சன் கிங் மற்றும் வசூல் சக்ரவர்த்தி என அறியப்பட்டவர். 1974ஆம் ஆண்டு தனது தந்தை என்.டி. ராமராவ் நடித்த ‘டாட்டம்மா காலா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


அதன் பின்பும் அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக தொடர்ந்து நிலைத்துள்ளார். சமீபத்தில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வாழ்த்து செய்தியில், “ஆக்சன் கிங், கலெக்ஷன் கிங், டயலாக் டெலிவரி கிங் என எனது அன்பு சகோதரர் பாலைய்யா சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து இன்னும் வலுவாக நிற்பது பெரும் சாதனை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல மன அமைதி, நல்ல ஆரோக்கியம், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்க கடவுள் அருளாசி செய்யட்டும்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

