2024 ஆம் ஆண்டின் அடுத்த நான்கு மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் பிஸியான மாதங்கள். ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய விடுமுறை நாட்களில் சில பெரிய படங்கள், அவற்றிற்கிடையில் மேலும் சில பெரிய படங்கள் என அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதற்கிடையில் தான் சிறிய பட்ஜெட் படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை தீர்மானித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரம் ஆகஸ்ட் 9ம் தேதி 8 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடித்து வெளியாக உள்ள ‘அந்தகன்’ படம் மட்டுமே ஸ்டார் அந்தஸ்து உள்ள ஒரு பெரிய படம் எனலாம். மற்ற படங்கள் சிறிய படங்களே. அந்தகன், கவுண்டம்பாளையம், லைட் அவுஸ், மின்மினி, பி 2 இருவர், பார்க், சூரியனும் சுரியகாந்தியும், வீராயி மக்கள் ஆகிய படங்கள் ஆகஸ்ட் 9ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் இவற்றுள் சில படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் வெளியான சிறிய படங்களில் ஒரு சில விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக எவை வெற்றி என இன்னும் சில நாட்களில் தெரியவரும் என சொல்லப்படுகிறது.