
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் மனைவி செந்திலைப்பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார், ஒரு பேட்டியில் அவர் பேசியதாவது, திருமணம் முடிந்ததும் செந்திலின் அப்பா என்னிடம், அவன் பண விஷயத்தில் வீக், அதனால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் இருந்து சம்பளம், மற்ற வருமானம் என அனைத்தையும் நான் தான் கவனிப்பேன்.அதேசமயம் ஆனால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தில் பாதியை வைத்துக்கொண்டு மீதியை என்னிடம் கொடுப்பார் என பகிர்ந்துள்ளார்.