Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அவர் இந்த விஷயத்துல ரொம்ப கோபப்படுவார்… கமல்ஹாசன் பற்றி நெல்சன் ஓபன் டாக்! #INDIAN2AudioLaunch

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாவுள்ளது.அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

இந்நிலையில் இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், “‘இந்தியன் 2’ திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிலதான் சொன்னாங்க. அப்போ நான் பேக் ஸ்டேஜ். இந்த நேரு ஸ்டேடியம்ல நிறைய விழாகளை இயக்கியிருக்கேன். 2.0 படத்தோட விழாவையும் நான்தான் இயக்கினேன். அடிக்கடி ரஜினி சார், சங்கர் சாரோட உழைப்பைப் பத்தி பாராட்டி பேசிட்டே இருப்பாரு. அவரு நான் எழுந்து போறதை பார்த்துட்டு அப்படி சொன்னாரானு தெரில. பிக் பாஸ்ல நிறைய டாஸ்க் வைப்பாங்க.தமிழ்ல எழுதுறதுல பிழை விட்டுருவாங்க. அதுக்கு அவர் பயங்கரமாக கோபப்படுவார்.

அப்படி ஒரு நாள் பேக் ஸ்டேஜ் வந்து என்னை பாத்து தப்பு இருக்குனு சொன்னாரு. எனக்குத்தான் தப்பு எதுனே தெரியாதே. அவர் திட்டுறதைக் கூட நான் பெருமையா எடுத்துக்குவேன்” என ஜாலியாக பேசினார் இயக்குனர் நெல்சன்.

அதேபோல் இந்தியன் 2 படத்தை பற்றி கமல் சார் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்வார். எனக்கு நீங்க சொல்றவங்க யாருமே தெரியல சாருன்னு சொன்னேன். அதான் உங்க முகத்துலயே தெரியுதே என கலாய்த்தார். கமல் சார் என்னை கலாய்த்தார் என நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தேன் என நெல்சன் பேசியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News