Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அவர் அழைத்தால் த.வெ.க கட்சியில் சேர தயார் – ராதா ரவி! #Kadaisithotta

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் தயாரித்து, ராஜேஷ் இசையமைத்துள்ள ‘கடைசி தோட்டா’ என்ற படத்தை அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள ராதாரவி சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளார். இதை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் ராதாரவி பேசுகையில், ‘கடைசி தோட்டா’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்தது. ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குனர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது, ஆனால் கதை கரு எனது பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம் உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்தாலும், யாரும் கேட்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்து கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம்தான். என்னை அழைத்த போது, நானும் ஏதாவது காரணம் கூறி நிராகரித்திருக்கலாம். ஆனால், அது நல்லதல்ல. இவ்வளவு பெரிய ஏற்பாட்டை ஒருவர் நம்மை நம்பி செய்யும்போது, நம்மால் முடிந்த உதவியை அவருக்கு செய்ய வேண்டும் என்பதற்காக இதில் பங்கேற்றேன்.

சினிமாவில் எனக்கு 50வது ஆண்டு; நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பின் வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லவா? அதே போல அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டே இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியதுதான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன் என்றார்.

- Advertisement -

Read more

Local News