Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அழகான சாரியில் மினுமினுக்கும் ரித்திகா சிங்… ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குத்துச் சண்டை வீராங்கணையாக இருந்தவர் ரித்திகா சிங். இந்தியா சார்பில் பல போட்டிகளிலும் இவர் பங்கேற்றிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்கவிருந்த இறுதிச்சுற்று படத்திற்கு கதாநாயகியை தேடி வந்தபோது கண்ணில் சிக்கியவர்தான் ரித்திகா. இப்படித்தான் ரித்திகா சினிமாவில் நுழைந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அனுபவ நடிகர் மாதவனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல காட்சிகளிலும் அசத்தலாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தெலுங்கு, ஹிந்தி என இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

அதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் அது போன்ற கதையிலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார். அதன்பின் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடித்தார். ஆனால், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த ஓ மை கடவுளே ரித்திகாவை ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாற்றிவிட்டது. இந்த படத்தில் ரித்திகா சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ரித்திகா சிங் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில், புடவையில் சைனிங் உடம்பை காட்டி ரித்திகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News