இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. இப்படம் தற்போது வரை ரூ.1,799 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் நாக வம்சி இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், இப்படம் தொடர்பாக மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, முருகன் அல்லது கந்தா என அழைக்கப்படும் கடவுள் கார்த்திகேயனின் கதையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்படுவதாகவும், இதில் அல்லு அர்ஜுன் கார்த்திகேயா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.