Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அரபு மொழியில் வெளியாகவுள்ள நடிகர் மம்மூட்டியின் டர்போ திரைப்படம்… இதுல ஆச்சரியம் என்னென்னா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மம்முட்டி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் “டர்போ” என்ற படம் வெளியானது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து “போக்கிரி ராஜா”, “மதுர ராஜா” என இரண்டு படங்களை கொடுத்தவரும், “புலி முருகன்” பட இயக்குனருமான வைசாக் இந்த படத்தை இயக்கியிருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு “டர்போ” மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், டீசன்டான வசூலையும் வெற்றியையும் பெற்றது. படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது ஆச்சரியமாக இந்த படம் வளைகுடா நாடுகளில் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இதற்காக அரபு மொழியில் இந்த படத்தின் டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டர்போ ஜோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மம்முட்டிக்கு அரபு மொழியில் டர்போ ஜாஸிம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் இதன் டப்பிங் பணிகளையும் ஸ்டுடியோவுக்கே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் மம்முட்டி. பெரும்பாலும் மலையாள படங்கள் வளைகுடா நாடுகளில் நேரடியாக மலையாளத்திலேயே வெளியாவதே வழக்கம். இந்த நிலையில் மம்முட்டியின் “டர்போ” திரைப்படம் அரபு மொழியில் வெளியாவதே ஆச்சரியமான ஒன்றாகும்.

- Advertisement -

Read more

Local News