Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

அமெரிக்காவில் ஆப்பிள் ஐபோன் 16 வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஆப்பிள் சிஇஒ டிம் குக் உடன் பேசி மகிழ்ந்த சித்தார்த் – அதிதி ஜோடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் நீண்ட நாட்களாக காதல் உறவில் உள்ளனர். சமீபத்தில் அவர்களுக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்தத்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று கருத்து தெரிவித்தபோதும், அவர்கள் திருமணம் அன்று நடக்கவில்லை, ஆனால் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்ததை உறுதிப்படுத்தினர். விரைவில் திருமணம் நடைபெறும் என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்போது அவர்கள் இருவரும் அமெரிக்காவை சுற்றி வருகின்றனர். இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் 16 வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பின் புகைப்படங்களை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இருவரும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், இந்த பிராண்டின் மிகப்பெரிய ரசிகர்கள் தாங்கள் என்பதை வெளிப்படுத்தி மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News