விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், அறிவிப்பு வெளியான பிறகு அந்தப் படம் குறித்து எந்த தகவலும் முன்னேற்றமும் இல்லை. இதனால் ரசிகர்களிடம் அந்தப் படம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.ஜேசன் சஞ்சய் இயக்கப்போகிறார் என்றதும் யார் ஹீரோ என்பதுதான் அனைவருக்கும் பெரிய கேள்வியாக இருந்தது.

முதலில் விஜய் சேதுபதி, விக்ரத்தின் மகன் துருவ் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்ட பின்னர் தற்போது ரைசிங் ஸ்டாராக இருக்கும் கவினுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியது. இதனை கவினே ஒரு பேட்டியிலும் உறுதிப்படுத்தினார். ஆனால், பேச்சுவார்த்தை அப்படியே நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், ஜேசனின் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் தயக்கப்படுவதாகவும் செய்திகள் உலாவருகின்றன.

இந்த சூழலில், விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீமன் தனது எக்ஸ் தளத்தில் ஜேசனை வாழ்த்தி பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “அப்பாவும் உனது வயதில்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். ஜேசன் சஞ்சய் நன்றாக பயிற்சி செய்து, தன்னை மேம்படுத்தியிருக்கிறார். சீக்கிரம் அடித்து ஆடுவார் வெற்றி பெறுவார். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.