‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது 237வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவு இயக்குகின்றனர். இப்படம் கமலின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான முன் தயாரிப்பு பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. ஆரம்பத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சமீபத்தில் கமல் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றதால், பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு மேலும் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கமலுடன் அவர் முதல்முறையாக பணியாற்றும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனோஜ் பரமஹம்சா முன்னதாக தமிழ் சினிமாவில் ‘ஈரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பணியாற்றியுள்ளார். இதைத் தவிர, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.