நடிகர் பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகியிருந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தகன் படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் பிரசாந்த் இணைந்து நடித்துள்ள கோட் படமும் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
கோட் படம் பிரஷாந்திற்கு மேலும் வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் பிரஷாந்த் தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தான் இந்தப் படங்களை தொடர்ந்து ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறப்பான பல இயக்குனர்கள் உள்ளதாகவும் அவர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடிக்க தான் விரும்புவதாகவும் பிரஷாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களுக்காக தான் கதைகளை கேட்டு வருவதாகவும் பிரஷாந்த் குறிப்பிட்டுள்ளார்.