நான் இளையராஜாவின் ரசிகன். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன். இப்போதுதான் வந்திருக்கிறார் அனிருத். அவருடைய பாடலைக் கேட்க கேட்க அவருக்கும் ரசிகன் ஆவேன் என்று நான் நம்புகிறேன்” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்வுக்காக நடிகர் கமல்ஹாசன் மலேசியா சென்றுள்ளார். அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம், “இந்தியன் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர். ‘இந்தியன் 2’-ல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல், இந்தியன் 2-ம் பாகத்தில் கமல் நடிக்கவில்லை என்றாலும், ஷங்கர் கூப்பிட்டிருந்தால் மற்ற நடிகர்கள் நடித்திருக்கலாம். அதனால் இதை நான் பேச முடியாது. இது ஷங்கரின் பொறுப்பு. அவருடைய விருப்பு. நான் இளையராஜாவின் ரசிகன். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன். இப்போது தான் வந்திருக்கிறார் அனிருத். அவருடைய பாடலைக் கேட்க கேட்க அவருக்கும் ரசிகன் ஆவேன் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நான் 40 வருடமாக இளையராஜாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன். 30 வருடமாக ரஹ்மானின் இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த இசையை புரிந்துகொள்ளவே எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது என்றார்.