அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்குள் இதன் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு படம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இடையில், இந்தப்படம் நிறுத்தி வைக்கப்பட்டபோது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித்.
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதற்கான முதல்பார்வை ஏற்கனவே வெளியானது. அதில் மூன்று அஜித் காட்சியளித்தார், இதனால் அவர் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் “God Bless U Mamae” என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில், அஜித் ஏராளமான துப்பாக்கிகள் சூழ, கூலிங் கிளாஸ் அணிந்து, கையில் டாட்டூவுடன், நாக்கை கடித்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அவரது சட்டையில் எண் 63 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்தால் அவர் இப்படத்தில் கைதியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.