Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அதிரடியாக படமாக்கப்படும் புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்… சொன்னபடி டிசம்பரில் வெளியாகுமா? #Pushpa 2 Update!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான திரைப்படம் தான் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம்.இப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது.இதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 தற்போது தயாராகி வருகிறது. இம்மாதம் ஆகஸ்ட் 15ல் திரைப்படம் ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டது பின்னர் ரிலீஸ் தேதி டிசம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கு காரணமாக எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியாக வரவில்லை எனவே மீண்டும் எடுக்கவேண்டும் என்றும் நடிகருக்கும் இயக்குனருக்கும் சில கருத்து வேறுபாடு என்றும் பல தகவல்கள் உலாவின. டிசம்பர் 10ம் தேதியிலும் புஷ்பா 2 வெளியாவது சந்தேகம் என கூறப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் சொன்னபடி டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News