Friday, January 10, 2025

அதர்வா நடித்துள்ள டி.என்.ஏ டீஸர் வெளியாகி வைரல்! #DNA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்க உள்ள ‘எஸ்கே 25’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ‘டிஎன்ஏ’ படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த், ஹரிஹரன் உள்பட பலர் இசையமைத்துள்ளார்கள். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News