பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படம் நாளை மறுதினம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி சிங்கிள் தியேட்டர்களில் 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வால் தற்போது சிங்கிள் தியேட்டர்களில் 236 ரூபாய் கட்டணமும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 324 ரூபாயும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
