விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம் நாளை செப்., 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே தமிழகம் தவிர, கேரளா மற்றும் பெங்களூருவில் பெரும் வரவேற்பு இருக்கும்.கேரளாவில் மட்டும் இப்படம் சுமார் 700க்கும் அதிகமான தியேட்டர்களில் 4000-க்கும் கூடுதலான காட்சிகளில் திரையிடப்பட உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் வினியோக நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேபோல் பெங்களூருவில் மட்டும் நாளை 100க்கும் அதிகமான தியேட்டர்களில் 1200க்கும் அதிகமான காட்சிகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கும் இதற்கு முன்பு இவ்வளவு காட்சிகளில் படம் திரையிடப்பட்டது இல்லை என கூறப்படுகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more