நடிகை மீனா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவருக்கு கண்ணழகி மீனா என்ற பெயரும் உண்டு. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். ரஜினியும், மீனாவும் சேர்ந்து நடித்த எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. மீனா குறித்து ஒரு மேடையில் பேசியிருந்த ரஜினிகாந்த், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த மீனாவா இது என்று அவர் வளர்ந்த பிறகு பார்த்து ஆச்சரியப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதேபோல் கமல் ஹாசனுடனும் அவர் நடித்த அவ்வை சண்முகி படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியும் அந்தப் படத்தில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.



தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். அதனையடுத்து அந்த சோகத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கிறார்.




இப்போது கோட் படத்தில் நடித்துள்ளார் மீனா. மேலும் ஒரு சில படங்களில் நடித்துவரும் அவர், சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை அதிகம் பகிர்வார். அந்தவகையில் இப்போது சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மீனா. அதில் டிஷர்ட், ஜீன்ஸ் சகிதமாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் மாடர்ன் உடையில் மனதை மயக்குறாரே மீனா.. இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறாரே என்று கூறி அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.