நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
அவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 15 அன்று ரகுதாத்தா படம் வெளியானது. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் ஹிந்தியில் பேபி ஜான் படம் வெளியாகிறது. பேபி ஜான் திரைப்படம் தெறி படத்தின் ரீமேக் என்பதும், அதனை அட்லீ தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் தனது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் இப்போதும் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அட்டகாசமாக யோகா செய்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம கீர்த்தி செமயா யோகா செய்றாங்களே என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.