சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து கடந்த ஆண்டு நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சங்கீதா. இணையத்தில் அதிகம் செயல்படும் சங்கீதா, தனது கணவருடன் வெளிநாட்டில் ரொமான்ஸாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதாவின் நெற்றியில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக பிரபலமாகி வருகிறது.

