Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அட இது நம்ப லிஸ்டலயே இல்லையே… கமல்ஹாசனை இயக்குகிறாரா அட்லி ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தக் லைஃப் படத்திற்கு பின்னர், கமல் ஹாசன் அட்லீ படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பைக்கு சென்றுள்ளார்கள் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர். இந்நிகழ்ச்சியில் அட்லீயும் பங்கேற்று பேசினார்.

முன்னதாக கமல்ஹாசனை வைத்து அட்லீ இயக்க ஏற்கனவே முடிவெடுத்து, கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டதாகவும், தற்போது கல்கி 2898 ஏ.டி மற்றும் இந்தியன் 2 படங்களில் புரோமோஷனுக்காக மும்பை வந்துள்ள கமல்ஹாசனைச் சந்தித்து தனது ஸ்கிரிப்ட்டை சொல்ல திட்டமிடுள்ளதாகவும், தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

ஏற்கனவே கமல்ஹாசன் குறித்து அட்லீ பேசியது இணையத்தில் வேகமாக தற்போது பகிரப்பட்டு வருகின்றது. அதாவது “நான் கமல்ஹாசன் சாருடன் வேலை செய்ய ஆசைப்படுகின்றேன். ஒருநாள் அவருக்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டு அவரிடம் செல்வேன். சினிமாவின் பைபிள், சினிமாவின் என்சைக்லோபீடியா என்றால் அது கமல்ஹாசன் சார் தான்” என பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தற்போது அட்லீ சல்மான் கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

- Advertisement -

Read more

Local News