Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அட்லி தயாரிக்கும் படத்துல சல்மான்கானும்‌ அட்லியும் நடிக்கிறாங்களா ? அட இது புதுசா இருக்கே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கரின் உதவி இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கி, இப்போது பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லி. அவர் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தற்போது, அட்லியும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் இணைந்து “பேபி ஜான்” என்ற படத்தை தயாரித்து வருகின்றன.

2016-ம் ஆண்டு விஜய் நடித்த அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் இப்போது இந்தியில் உருவாகி வருகிறது, இதில் வருண் தவான் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நாயகிகளாகவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலிவுட் நடிகர் சல்மான்கானும் ‘பேபி ஜான்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இயக்குனர் அட்லியும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பேபி ஜான் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News