ஷாரூக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அட்லி பான் இந்தியா இயக்குனராக உயர்ந்தார். அதன் பின், அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கும் படத்தை அட்லி இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டணி உறுதியாக இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், அட்லியின் சம்பள விவாதத்தில் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், அட்லி ஒரு கதையை சல்மான் கானிடம் கூறியிருந்தார். அந்தக் கதையை கேட்டு, சல்மான் இப்போது படத்திற்கு ஒப்புதல் அளித்ததாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சல்மான் கான் மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என நினைக்கிறாராம். 1000 கோடி வசூல் சாதனைகள் பாலிவுட்டில் புதிய ரீதியாக மாறியுள்ளதால், தன்னுடைய படமும் அப்படியொன்று ஆக வேண்டும் என்பதற்காக அட்லியுடன் கூட்டணி அமைக்கிறார் என்று கூறுகின்றனர்.இந்தக் கூட்டணி உறுதியாக அமையுமா அல்லது அல்லு அர்ஜூன் கூட்டணி போல ஆரம்பத்திலேயே முடிவுறுமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.