கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் த்ரிஷா. அவரின் சினிமா வாழ்க்கையில் சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்கள் முக்கியமானவையாக அமைந்தன. தற்போது கமலுடன் தக்லைப் மற்றும் அஜித்துடன் விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.


சமீபத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பல வதந்திகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக பாடகி சுசித்ரா அவரை குறிப்பிட்டு பேசிய வீடியோ சர்ச்சையை மேலும் அதிகமாக்கியது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக, “அடுத்தவர்களின் கருத்துக்களை தூக்கி சுமக்காதீர்கள்” என்ற ஒரு பதிவை வெளியிட்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் த்ரிஷா.