நடிகர் கவின் மற்றும் இயக்குனர் இளன் கூட்டணியில் உருவான ஸ்டார் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், கவின் தனது நடிப்பால் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளார். படக்குழுவின் தகவலின்படி, வார இறுதியில் கடந்த மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் கிஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையுமெனவும், அதன்பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த படத்திற்கான புதிய அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கவின், தற்போது பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்த்த நடிகராக மாறிவிட்டார். இருப்பினும், சமீபத்தில் அவர் நடித்த ஸ்டார் படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தியுள்ளார் என்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது நடன இயக்குநர் சதீஷின் இயக்கத்தில் கவின் கிஸ் படத்தில் நடித்து வருகிறார். கிஸ் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் முடிவடையவுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி இணைந்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிவரும் கவின், அடுத்ததாக பிளடி பெக்கர் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் அனைவரையும் கவர்ந்துள்ளது.