விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கி தொடர்ந்து 40 நாட்கள் நடக்க உள்ளது. இதில் அஜித் மற்றும் திரிஷா இணைவதாகவும், பின்னர் ரெஜினா கசாண்ட்ராவும் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளனர்.


இந்நிலையில், அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள நடிகர் நஸ்லன் இணைந்துள்ளார். நஸ்லன், அஜித்தின் மகனாக நடிக்கிறார். பிரேமலு படத்தின் வெற்றியால் நஸ்லன் பிரபலமானார்.

பிரேமலு படம் மலையாளத்தில் தொடங்கி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியானது, 130 கோடி ரூபாய் வசூல் செய்தது. பிரேமலு 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
