அஜித்குமார் நடித்துவரும் “விடாமுயற்சி” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என்றும், தீபாவளிக்குப் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்துள்ள அஜித், “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பை முடித்ததும், “குட் பேட் அக்லி” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், “குட் பேட் அக்லி” படத்தில் ரெடின் கிங்ஸ்லி காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் முழுக்க அஜித்துடன் மெயின் காமெடியனாக ரெடின் கிங்ஸ்லி நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.