Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஃபேமிலி சென்டிமென்ட், த்ரில்லர் என அசத்த வரும் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் விருந்து திரைப்படம்… ஆகஸ்ட் 29ல் வெளியாகிறது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் “விருந்து”. கதாநாயகியின் அம்மா, அப்பா மர்மமான மரணத்திற்குள்ளாகின்றனர், இந்த மரணத்தின் பின்னுள்ள ரகசியத்தை அறியும் முயற்சியில் கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கண்ணன் தாமர கண்ணன்.

அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளர்களாக ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் பணியாற்றியுள்ளனர். படத்தொகுப்பை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில் படம் முழுவதும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில் படம் முழுவதும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் யூகிக்க முடியாத வகையில் படமாக்கி இருப்பது இப்படத்தின் சிறப்பு.இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News