கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவராஜ்குமார். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படத்தின் மூலமாக கன்னடத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் அதிகமான ரசிகர்களை பெற்றவர். இதைத்தொடர்ந்து தற்போது கன்னடத்தில் உருவாக இருக்கும் பைரவனா கோனே பாட்டா என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார். இந்த படத்தில் சிவராஜ்குமாரின் கதாபாத்திர பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் உயரமான இடத்தில் நடைபெற்ற இதன் போட்டோ ஷூட்டுக்காக கிட்டத்தட்ட 400 படிகள் வரை ஏறி கலந்து கொண்டுள்ளார் சிவராஜ்குமார். தனது 61 வயதிலும் ஒரு போட்டோஷூட்டுக்காக சிவராஜ்குமார் இவ்வளவு தூரம் மெனக்கெடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போய் உள்ளார் இயக்குனர் ஹேம்நாத் ராவ்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more