இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுவதும் பிரபலமானவர். 90களில் சினிமா துறையில் அறிமுகமான அவர் இன்னும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில், அவரது இசையமைப்பில் உருவான ஆடுஜீவிதம் படம் வெளியானது. விரைவில் தக் லைஃப், ராயன் போன்ற படங்களும் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கடந்த ஆண்டில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரு பாகங்கள், மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.பின்னணி இசையும் மிகுந்த தரத்தில் அமைந்திருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.
அவர் அளித்துள்ள பேட்டியில் நான் ஸ்டூடியோவை ஆரம்பித்தபோது என்னிடம் ஒரு பைசாவும் இல்லை. அப்போது ஆம்ப்லிஃபையர் போன்ற அடிப்படை உபகரணங்களைக் கூட வாங்க முடியவில்லை. மிகுந்த சிரமத்தில் இருந்தேன்.அப்போது என்னுடைய ஸ்டூடியோவில் ஏர் கண்டிஷனர் மற்றும் ரெக்கார்ட்பெட் மட்டுமே இருந்தன.
வேறு எதுவும் கிடையாது, ஏனெனில் என்னிடம் பணம் இல்லை. எனது அம்மா தனது நகையை அடகு வைத்து எனக்கு பணம் கொடுத்தார்.அந்தப் பணத்தை வைத்து நான் முதன்முதலாக ஸ்டூடியோவுக்காக ஒரு ரெக்கார்டர் வாங்கினேன். அந்தச் சமயம்தான் என் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான தருணம்.எனது எதிர்காலம் இதுதான் என்று உணர்த்திய முக்கியமான தருணம்” என்று பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.