Saturday, September 14, 2024

ஷாருக்கானுக்கு வில்லனாகும் அபிஷேக் பச்சன்? #KINGMovie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக், இன்றும் ஹிந்தியில் உள்ள இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிராஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது. பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு சுஜய் கோஷ் மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதுகிறார்கள். சூழல் இப்படி இருக்க இப்படத்தில் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார் என்று சில நாட்களாக தகவல் ஓடினாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இப்போது அதை அமிதாப் பச்சன் உறுதி செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை மேற்கோள் காட்டி அபிஷேக் பச்சனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அவரது ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News