Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

விறுவிறுவென திரையுலகில் நகரும் விதார்த்… அஞ்சாமை வெல்லுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2010 ஆம் ஆண்டு முதல் படத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிரூபித்தார் விதார்த். மைனா படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் அவர் நடித்த விதம் பெரும் கவனம் பெற்றது. இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

விதார்த் தேர்வு செய்யும் கதைகள் வித்தியாசமானவை. 2001 முதல் 2009 வரை சினிமாவில் இருந்தாலும், மைனா படம் தான் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது. மின்னலே படத்தில் இருந்து குருவி வரை 20 படங்களில் நடித்தாலும், மைனா படம் அவருக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.

குரங்கு பொம்மை, காற்றின் மொழி, ஒரு கிடாயின் கருணை மனு, இறுகப்பற்று, பயணிகள் கவனிக்கவும் ஆகியவை இவரது தனித்துவமான படங்கள்.

அஞ்சாமை படம் இன்று வெளியாகியுள்ளது.மத்திய அரசின் நீட் தேர்வை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதன் கதையை கேட்கும்போதே விதார்த் கண்கலங்கியுள்ளார். அஞ்சாமை படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்கிறார்கள். மேலும் ஒரு பபுதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று நடந்தது மற்றும் இப்படத்தில் விதார்த் மற்றும் ஜனனி நடிக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News