அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் தயாராகும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது அப்படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா ? இல்லையா ? என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஒரு சிலர் கண்டிப்பாக விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்கின்றனர்.ஆனால் ஒரு சிலரோ இப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்கின்றனர். எனவே குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.
நடன இயக்குனர் சதிஷ் இயக்கத்தில் கவின் நடித்து வரும் திரைப்படம் தான் கிஸ். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறார்களாம். ஒருவேளை அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போனால் கிஸ் திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. எனவே அஜித்தின் முடிவிற்காக கிஸ் படக்குழு ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.