Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு அஜர்பைஜான் செல்லும் முன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

தமிழ் சினிமாவிற்கு எந்த பின்னணியும் இல்லாமல் தனது பயணத்தை தொடங்கி, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகராக அஜித் குமார் இருந்து வருகிறார். தனது தொடக்க காலத்தில் காதல் கதாநாயகனாக இருந்து, பின்னர் அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு, நெகடிவ் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, அதில் ஹீரோயிசம் காட்டும் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்தி, மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில வாரங்களுக்கு முன்பு முடிந்தது. இதற்கு முன்னதாக தொடங்கிய ‘விடாமுயற்சி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து, சில காரணங்களால் தடைப்பட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கான அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், அஜர்பைஜானில் ஜூன் 20 ஆம் தேதி மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை சமீபத்திய பேட்டியில் நடிகர் அர்ஜுனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அஜித் குமார் கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். குறிப்பாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்வதற்கு முன், அஜித் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News